Tamil-Techno .....தமிழில் தொழில்நுட்ப தகவல்கள். Headline Animator

Tamil-Techno .....தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்.

Tuesday, January 5, 2010

உலகின் மிக உயரமான கட்டிடம் -Burj Dubai





கடந்த சில வருடங்களாகவே துபாய் தனது மூக்கின் மேல் விரல் வைக்கும் செயற்படுகளினால் எல்லா பத்திரிகைகளிலும் இடம் பிடித்துக்கொண்டது.உதாரணத்திற்கு அதன் 7 நட்டச்திர விடுதியை குறிப்பிடலாம்.கடந்த திங்கள் கிழமை உலகின் உயரமான கட்டடத்தை திறந்து வைத்தது.இதன் பெயர் புர்ஜ் Dubai (Burj Dubai.).
ஏறத்தாள 800m உயரமான இக்கட்டிடம் இதுவரை உலகின் உயரமான கட்டடம் டைபை 101 (Taipei) விட 292m உயரமானது .


இக்கட்டிடத்தின் உயரத்தை 95km தூரத்தில் இருந்து பார்க்கும் அளவுக்கு உயரமானது.இக்கட்டிடத்தை கட்டி முடித்தது அவளவு இலகுவாக இருக்கவில்லை இதற்கு உயரம் மட்டும் காரணம் இல்லை .துபாய் உயரமானதும் வேகமானதுமான காற்றுக்கு பெயர் போன இடம் ,அத்துடன் துபாயின் பூகோள அமைவிடம் கூட கட்டடங்கள் கட்டுவதற்கு சவாலானது.மேலும் இதை கட்டும் போது,இரண்டு தடவை மின்னல் இக்கட்டிடத்தை தாக்கியுள்ளது.இவை எல்லாவற்றையும் தாண்டி இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.



மேலும் 2007 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்டட வேலை 2009 செப்டெம்பரில் முடிவுற்றது. இதன் போது 380 பொறியாளர்களும் பல ஆயிரக்கணக்கான தொழிநுட்ப நிபுணர்களும் இடுபட்டனர்.இக்கட்டிடத்தை கட்டி முடிக்க 22 மில்லியன் மனித மணித்தியாலங்கள் தேவை பட்டுள்ளன. அதன் உச்சி கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு 12 ,000 பணியாளர்கள் தேவை பட்டுள்ளனர் .

இக்கட்டிடம் தன்னகத்தே
57 -உயரம் தூக்கிகளையும்,49 அலுவலக மாடிகளையும் ,1044 அடுக்குமாடி குடியிருப்புக்களையும் கொண்டுள்ளது.

மேலும் இக்கட்டிடம் தன்னகத்தே பல உலகசாதனைகளையும் கொண்டுள்ளது.

1.உலகின் மிக உயரமான கட்டிடம்.

2.அதிகளவான அடுக்கு மாடிகளை கொண்ட கட்டிடம்

3.அதிகளவு நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடம்

4.மிக உயரமான தூக்கியை கொண்டுள்ள கட்டிடம்.

உலகின் பிற உயரமான கட்டங்கள்.

இக் கட்டிடம் டுபாயின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் என்பதில் சந்தேகங்கள் இருக்க முடியாது.


No comments:

Post a Comment