Tamil-Techno .....தமிழில் தொழில்நுட்ப தகவல்கள். Headline Animator

Tamil-Techno .....தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்.

Friday, January 8, 2010

மூன்றாவது இடம் தான்......ஆனால் முன்னேற இடம் உண்டு





மிகப்பெரிய இடைவெளி ஆங்கே உள்ளது.ஆனால் இப்பொது கூகிள் குரோம் இணைய உலாவி வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாவது இடம் அவளவு மோசமான இடம் இல்லை காரணம் கூகிள் குரோம் மிக அண்மைய உலாவி.
கூகிள் குரோமானது உலாவி சந்தையில் 4.63 % பிடித்துகொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காவது இடத்தில உள்ள சபாரிக்கும் இதற்கும் .17 % வித்தியசமே உள்ளது. கூகிள் குரோம் சந்தைக்கு வந்து 18 மாதங்களே ஆகின்றது.அனால் இந்த 18 மாதங்களில் இது மிகப் பெரிய முன்னேற்றம்.
எந்த உலாவி முதலிடத்தில் உள்ளது ,சந்தகமே இல்லாமல் மைக்ரோ சொப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் இது தன்வசம் 62 .69 % சந்தையை கொண்ட்டுள்ளது.

ஆனால் மைக்ரோ சொப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் தனது சந்தை பலத்தை இழந்து வருகின்றது என்றால் அது மிகை இல்லை .இதற்கு முக்கிய காரணம் நெருப்பு நரியின் மிகப் பெரிய வளர்ச்சி.நெருப்பு நரியானது தன் வசம் 24.61 % சந்தை வாய்ப்பை கொடுள்ளது.




இன்னும் சில வருடங்களில் இன்டர்நெட் எஸ்ப்லோரெர் கடும் போட்டியை கூகிள் குரோம் இடம் இருந்து சந்திக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்க்கு காரணம் கூகிள் கூட ஒபெரடிங் சிஸ்டம் ஒன்றை அறிமுகம் செய்யும் முயற்சியில் உள்ளது.கூகிள் அவ்வாறு செய்யும் ஆயின் கூகிள் குரோம்மே அவ் ஒபெரடிங் சிஸ்டத்தில் உலாவியாக இருக்கும்.அதாவது எப்படி மைக்ரோசாப்ட் இன் ஒபெரடிங் சிஸ்டத்தில் இன்டர்நெட் எஸ்ப்லோரெர் உலாவியாக உள்ளது போல.

இன்டர்நெட் எஸ்ப்லோரெர் முதலிடத்தில் இருக்கக்காரணம் அது மைக்ரோசாப்ட் இன் ஒபெரடிங் சிஸ்டத்தில் இணைந்து வருவதே.
இதே பொறிமுறையை தான் கூகுளும் பின் பற்றப்போகிறது .



Tuesday, January 5, 2010

கூகுளின் புதிய வரவான Nexus One இன் சில போடோக்கள்.




























கூகுளின் புதிய வரவு -நேசுஸ் ஒன் (Nexus One )



தேடல் உலகின் வல்லரசான கூகிள் தனது முதலாவது கைத்தொலைபேசியை இன்று அறிமுகம் செய்தது.

இன்று கலிபோர்னியாவில் நடந்த அதன் கைத்தொலைபேசி அறிமுகம் விழாவில் அறிமுகம் செய்ததது.அப்ப்ளின் ஐ-போனேக்கு போட்டியாக இருக்கும் என நம்பப்படும் இப்புது வரவு ,கூகிள் ஆல் நடத்தப்படும் இணைய கடைகளால் விற்கப்படும்.மற்றைய ஐ -போன்கள் மாதிரி அல்லாமல்,தொலைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யாமலும் இப் தொலைபேசிஐ வாங்கமுடியும்.

$180- with contract
$ 530-Unlock


அமெரிக்காவில் T-mobile கூகிள் போன் தொலைபேசி சேவையை வழங்கும் ,அதேவேளை ஐரோப்பாவில் வோடபோன் இச்சேவையை வழங்கும்.

கூகுளின் புதிய வரவு -நேசுஸ் ஒன் இன் சிறப்பபம்சங்களை பார்த்தோமானால் ,
3.7 இன்ச் டச் ஸ்க்ரீன்,5 மெகா பிசேல் கேமரா ,WI-FI வசதி அத்துடன் தொலைகாட்டியும்.

இப் தொலைபேசியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக கருதப்படுவது, மனித குரல் மூலம் செயல் படக்கூடிய கிபோர்ட்.தட்டச்சு செய்வதற்கு பதிலாக எமது குரல் ஒலி மூலம் குறும் செய்தி ,இ மெயில் போன்றவற்றை அனுப்பலாம்.மேலும் விளக்கமாக எமது குரல் நேரடிய எழுத்துருவாக மாற்றும் வசதி
இத் தொலைபேசிக்கு உள்ளது.

அப்ப்ளின் ஐ-போனேக்கு மிக பெரிய போட்டியாக வந்துள்ள கூகுளின் புது வரவு எப்படி அப்ப்ளின் ஐ-போனேனை முந்துகின்றது என பார்க்கலாம்.




உலகின் மிக உயரமான கட்டிடம் -Burj Dubai





கடந்த சில வருடங்களாகவே துபாய் தனது மூக்கின் மேல் விரல் வைக்கும் செயற்படுகளினால் எல்லா பத்திரிகைகளிலும் இடம் பிடித்துக்கொண்டது.உதாரணத்திற்கு அதன் 7 நட்டச்திர விடுதியை குறிப்பிடலாம்.கடந்த திங்கள் கிழமை உலகின் உயரமான கட்டடத்தை திறந்து வைத்தது.இதன் பெயர் புர்ஜ் Dubai (Burj Dubai.).
ஏறத்தாள 800m உயரமான இக்கட்டிடம் இதுவரை உலகின் உயரமான கட்டடம் டைபை 101 (Taipei) விட 292m உயரமானது .


இக்கட்டிடத்தின் உயரத்தை 95km தூரத்தில் இருந்து பார்க்கும் அளவுக்கு உயரமானது.இக்கட்டிடத்தை கட்டி முடித்தது அவளவு இலகுவாக இருக்கவில்லை இதற்கு உயரம் மட்டும் காரணம் இல்லை .துபாய் உயரமானதும் வேகமானதுமான காற்றுக்கு பெயர் போன இடம் ,அத்துடன் துபாயின் பூகோள அமைவிடம் கூட கட்டடங்கள் கட்டுவதற்கு சவாலானது.மேலும் இதை கட்டும் போது,இரண்டு தடவை மின்னல் இக்கட்டிடத்தை தாக்கியுள்ளது.இவை எல்லாவற்றையும் தாண்டி இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.



மேலும் 2007 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்டட வேலை 2009 செப்டெம்பரில் முடிவுற்றது. இதன் போது 380 பொறியாளர்களும் பல ஆயிரக்கணக்கான தொழிநுட்ப நிபுணர்களும் இடுபட்டனர்.இக்கட்டிடத்தை கட்டி முடிக்க 22 மில்லியன் மனித மணித்தியாலங்கள் தேவை பட்டுள்ளன. அதன் உச்சி கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு 12 ,000 பணியாளர்கள் தேவை பட்டுள்ளனர் .

இக்கட்டிடம் தன்னகத்தே
57 -உயரம் தூக்கிகளையும்,49 அலுவலக மாடிகளையும் ,1044 அடுக்குமாடி குடியிருப்புக்களையும் கொண்டுள்ளது.

மேலும் இக்கட்டிடம் தன்னகத்தே பல உலகசாதனைகளையும் கொண்டுள்ளது.

1.உலகின் மிக உயரமான கட்டிடம்.

2.அதிகளவான அடுக்கு மாடிகளை கொண்ட கட்டிடம்

3.அதிகளவு நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடம்

4.மிக உயரமான தூக்கியை கொண்டுள்ள கட்டிடம்.

உலகின் பிற உயரமான கட்டங்கள்.

இக் கட்டிடம் டுபாயின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் என்பதில் சந்தேகங்கள் இருக்க முடியாது.


Sunday, January 3, 2010

2009 ஆம் ஆண்டின் முக்கிய தொழில் நுட்ப மைல் கற்கள் .


தனி மனிதர்கள் பெயர்கள் அதிகமா உச்சரிக்கப்பட்டததை விட கூகிள் ,பேஸ்புக் த்விட்டேர்,ஆப்பிள் போன்ற இணைய தளங்களின் பெயரே அதிகமா பேசப்பட்டது நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டில்.2009 ஆண்டின் முடிவில் நாம் மிகவும் நெருக்கமா இணைக்கப்பட்டுள்ளோம் .

இதற்கு முக்கிய காரணம் தொழிநுட்பத்தில் ஏற்பட முன்னேற்றமே அன்றி வேறொன்றுமில்லை.புத்தங்களை இனி கையில் கொண்டு செல்லத் தேவை இல்லை.புத்தகங்கள் எல்லாம் மின் புத்தகங்களாக வந்துவிட்டன.

கைத்தொலை பேசி மூலம் பேஸ்புக்கை பார்க்கும் வசதியும் நம்மிடம் கைவசம் உள்ளது.
அப்படி என்ன தொழில் நுட்ப பரிமணம் ஏற்பட்டது 2009 ஆம் ஆண்டில்.

1.
2009 ஆம் ஆண்டின் இறுதியில் சாதாரண தொலைபேசி காலவதியாகிவிட்டது.இதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் தொலைபேசி எனப்படும் சகல வசதிகளையும் கொண்ட தொலைபேசிகளாகும்.

ஸ்மார்ட் தொலைபேசிகள் ஒரு மினி கணனி போல் வேலை செய்கின்றன.இவை ஒரு கணணி கொண்டுள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன .காலநிலை தகவல் தொடக்கம் விமான பயண நேரம் வரையான அனைத்து தகவல்களை பெற முடியும் .

பல்வேறு இணையதள தகவல்கள் மூலம் அறிய கிடைப்பது ,இந்த கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் ஸ்மார்ட் விற்பனை 24 வீதத்தால் அதிகரித்துள்ளது 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது.

2.


2009 ஆம் ஆண்டு பேஸ்புக் ஆண்டேன்றால் அது மிகை இல்லை.
2004 ஆம் சில நண்பர்கள் தமக்கிடையே தகவல்களை பகிர உருவாக்கபட்டது.

ஆனால் இன்று 350 மில்லியன் பாவனையாளர்களை கொண்டு வெற்றி நடை போடுகிறது.இபோது எமது பேஸ்புக் வாழ்கையின் ஒரு பகுதியாகிவிட்டது .

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 150 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்கள் இருந்தனர் இன்றோ 350 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்கள்.ஒரு சராசரி பேஸ்புக் பாவனையாளர் ஒரு நாளில் 60 நிமிடங்களை பேஸ்புகில் செல்வழிகிறார் .


3.

தேடல் இயந்திரங்களுக்கிடையான போட்டியும் 2009 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று.கூகிள் தேடு பொறியே தேடல் இயந்திரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆனால் 2009 இல் சிறிய தேடல் நிறுவனங்கள் புதுமையான தேடல் யோசனைகளுடன் கூக்ளிக்கு போட்டியாக வந்தன..இதில் முக்கியமானது Wolfram-Alpha எனப்பட்டும் தேடு பொறியாகும்.

இத்தேடு பொறியானது தேடல்களுக்கு விடைதருவது மட்டுமல்லாது ,ஏனைய பல விடயங்களை தருகிறது.உதாரணமாக ஒரு நாட்டின் பெயரை தட்டச்சு செய்தால் அந்நாடு தொடர்பான பல விடயங்களை தருகிறது .

இன்னொரு போட்டி கூகிள் எதிர் கொள்வது பிங் எனப்படும் மைக்ரோசொப்டின் தேடு பொறி.பிங் அறிமுகப்படுத்திய போட்டோக்களை தேடும் புதிய முறைகள் மற்றும் அதன் வேகம் என்பன ,தேடல் உலகின் 10
வீதமா தேடலை பிங் வசம் வைத்திருக்க உதவியது .

Friday, January 1, 2010

2010 இல் கூகுளின் தலைமையின் கீழ் வருமென நம்பப்படும் இணையத்தளங்கள்

தேடல் உலகின் வல்லரசான கூகிள் பின்வரும் ஆறு இணையத்தளங்களில் ஒன்றை கொள்வனவு செய்யுமென எதிர்பர்கப்படுகின்றது.
கூகுளின் தலைமை அதிகாரி Eric Schmidtஐ மேற்கோள்காட்டி சர்வதேச செய்தித்தாபனங்கள் எதிர்வு கூரியுள்ளன.


1.Twitter

7RCUWF6KCBXU















தினமும் 66 மில்லியன் அங்கத்தவர்கள் பார்வையிடும் இணையத்தளமான த்விட்டேர்ஐ கொள்வனவு செய்யும் நோக்கத்தில் கூகிள் உள்ளது .இதற்கான காரணம்,த்விட்டேர் மிகவும் விரைவாக வளரும்

இணையத்தளங்களில் ஒன்றாக உள்ளதுடன் இதில் மாதம் 60 மில்லியன் புதியவர்கள் அங்கத்தவர்கள் ஆகின்றனர்.

கூகுளின் முன்னைய முயற்சியான ஓர்குட்(Social networking site like, Facebook) ஐ கொள்வனவு செய்யும் திட்டமும் கைகொடாத நிலையிலும் ,அதன் புதிய அறிமுகமான கூகிள் வ்வேவும் (Google Wave)எதிர்பார்த்த பெறுபேற்றைத்தரதா நிலையிலும் கூகிள் தனது த்விட்டேர்ஐ கையகப்படுத்தும் நோக்கத்தில் மும்முரமாக இறங்கும் என எதிர்பர்கப்படுகின்றது .


2.Digg





டிக்க் என்பது ஒரு தேடல் இயந்திரம் ,உதாரணமாக கூகுளில் ஒரு சொல்லை தேடினால் மில்லியன் கணக்கான எமது தேடலுடன் தொடர்புபட்ட சொல்லை தரும் ஆனால் டிக்கில் தேடினால் எமது தேடலுடன் தொடர்பு பட்ட மிகவும் பிரபல்யமான தேடல்களை மட்டும் தரும். இப்பிரபல்யமான தேடல்கள் பாவனையாளர்களின் கருத்தை கொண்டே தீர்மானிக்கப்படும்.

உதாரணமாக உணவு சம்மந்தமான வெப்சைட்ஐ டிக்கில் சமர்பிக்கிறீர்கள்அந்த வெப்சைட் டிக்க் பாவனையாளர்களால் அதிகளவு விரும்பப்பட்டால் டிக்க் தேடலில் முதல் பக்கத்தில் வரும்.

கூகிள் இதில் காதல் கொள்ள காரணம் ,கூகிள் யாஹூ அல்லது ம்ஸ்ன்(MSN) மாதிரி விளம்பரங்களை தனது வெப்சைட்ல் பிரசுரிப்பது இல்லை.கூகிள் தனது வருமானத்தை திரட்டுவது பிறருடையா வெப்சைட்ல் விளம்பரங்களை பிரசுரிப்பது மூலமாகத்தான் .கூகிள் ஆனது டிக்கை வேண்டினால் கூகிள் தனது விளம்பரங்களை பிரசுரிப்பது இலகுவா இருக்கும்.அத்துடன் கூகுளின் வியாபார உத்தியும் டிக்கின் வியாபார உத்தியும் ஒரே மாதிரி உள்ளது.

3. Jumptap


ஜம்ப்டப் என்பது ஒரு மொபைல் விளம்பர நிறுவனமாகும்.கைத்தொலை பேசிவழி விளம்பரம் செய்வதில் இந்நிறுவனம் புகழ் பெற்றது.

கணணி வழி விளம்பரங்கள் இணைய உலகத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் கைத்தொலை பேசிவழி விளம்பரகள் அடுத்த தலை முறை விளம்பர உத்தியாக இருக்கும் என கூகிள் நம்புகிறது.

4. Yelp




எல்ப் இணைய தளமானது பாவனையாளர்கள் தமது பிற்குறிப்புகளை பகிர இடமளிகிறது .இப்பிற்குறிப்புக்கள் பெரும்பாலும் பாவனையாளர்களின் தனிபட்ட சுற்றுலா அனுபவம்,ஒரு குறித்த விடுதி பற்றிய அனுபவம் அல்லது குறித்த உணவகம் பற்றிய அனுபவம் அல்லது ஒரு பிரபல்யமான இடம் பற்றிய கருத்துரைகளை பதிய இடமளிகின்றது.

எல்ப் இணையத்தளத்தை வாங்குவதன் மூலம் தனது விளம்பர எல்லையை மேலும் விஸ்தரிக்கலாம் என கூகிள் எண்ணி உள்ளது .

5. Cellfire




செல்பயர் என்பது இலத்திரனியல் க்குபன்களை வழங்கும் கைத்தொலைபேசி நிறுவனமாகும்.இலத்திரனியல் க்குபன்களும் கூகுளால் இணையத் தளங்களில் பிரசுரிக்கப்படும் விலைகழிவு விளம்பரங்களும் ஒப்பிட்டு அளவில் ஒத்தவை.கைத்தொலை பேசிவழி விளம்பரம் செய்வதற்கு செல்பயர் கொள்வனவு ஒரு மைல் கல்லாக இருக்கும் என கூகிள் நம்புகிறது.

6.Yandex



யன்டெக்ஸ்சை என்பது ரஷ்யாவின் கூகிள் எனலாம். யன்டெக்ஸ் ரஷ்யாவின் பெரிய நிறுவனமும் தேடல் இயந்திரமும் ஆகும்.ரஷ்யாவிலும் அதனை சூழவுள்ள நாடுகளினாலும் அதிகளவு உபயோகிக்கப்படும் தேடல் பொறி யன்டெக்ஸ்சை ஆகும்.

இதற்கு காரணம் மிக தரமான ரஷ்ய மொழியை யன்டெக்ஸ்சை பாவிப்பதால் பாவனையாளர்களுக்கு மிக திருப்தியான தேடல் பதிவுகளை கொடுக்கின்றது.

யன்டெக்ஸ்சை வாங்குவதன் மூலம் சோவியத் ஒன்றிய நாடுகளில் தனது காலை மேலும் பலமாகயுன்றலாம் என கூகிள் எண்ணுகிறது.