Tamil-Techno .....தமிழில் தொழில்நுட்ப தகவல்கள். Headline Animator

Tamil-Techno .....தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்.

Friday, January 8, 2010

மூன்றாவது இடம் தான்......ஆனால் முன்னேற இடம் உண்டு





மிகப்பெரிய இடைவெளி ஆங்கே உள்ளது.ஆனால் இப்பொது கூகிள் குரோம் இணைய உலாவி வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாவது இடம் அவளவு மோசமான இடம் இல்லை காரணம் கூகிள் குரோம் மிக அண்மைய உலாவி.
கூகிள் குரோமானது உலாவி சந்தையில் 4.63 % பிடித்துகொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காவது இடத்தில உள்ள சபாரிக்கும் இதற்கும் .17 % வித்தியசமே உள்ளது. கூகிள் குரோம் சந்தைக்கு வந்து 18 மாதங்களே ஆகின்றது.அனால் இந்த 18 மாதங்களில் இது மிகப் பெரிய முன்னேற்றம்.
எந்த உலாவி முதலிடத்தில் உள்ளது ,சந்தகமே இல்லாமல் மைக்ரோ சொப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் இது தன்வசம் 62 .69 % சந்தையை கொண்ட்டுள்ளது.

ஆனால் மைக்ரோ சொப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் தனது சந்தை பலத்தை இழந்து வருகின்றது என்றால் அது மிகை இல்லை .இதற்கு முக்கிய காரணம் நெருப்பு நரியின் மிகப் பெரிய வளர்ச்சி.நெருப்பு நரியானது தன் வசம் 24.61 % சந்தை வாய்ப்பை கொடுள்ளது.




இன்னும் சில வருடங்களில் இன்டர்நெட் எஸ்ப்லோரெர் கடும் போட்டியை கூகிள் குரோம் இடம் இருந்து சந்திக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்க்கு காரணம் கூகிள் கூட ஒபெரடிங் சிஸ்டம் ஒன்றை அறிமுகம் செய்யும் முயற்சியில் உள்ளது.கூகிள் அவ்வாறு செய்யும் ஆயின் கூகிள் குரோம்மே அவ் ஒபெரடிங் சிஸ்டத்தில் உலாவியாக இருக்கும்.அதாவது எப்படி மைக்ரோசாப்ட் இன் ஒபெரடிங் சிஸ்டத்தில் இன்டர்நெட் எஸ்ப்லோரெர் உலாவியாக உள்ளது போல.

இன்டர்நெட் எஸ்ப்லோரெர் முதலிடத்தில் இருக்கக்காரணம் அது மைக்ரோசாப்ட் இன் ஒபெரடிங் சிஸ்டத்தில் இணைந்து வருவதே.
இதே பொறிமுறையை தான் கூகுளும் பின் பற்றப்போகிறது .



No comments:

Post a Comment