Tamil-Techno .....தமிழில் தொழில்நுட்ப தகவல்கள். Headline Animator

Tamil-Techno .....தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்.

Sunday, January 3, 2010

2009 ஆம் ஆண்டின் முக்கிய தொழில் நுட்ப மைல் கற்கள் .


தனி மனிதர்கள் பெயர்கள் அதிகமா உச்சரிக்கப்பட்டததை விட கூகிள் ,பேஸ்புக் த்விட்டேர்,ஆப்பிள் போன்ற இணைய தளங்களின் பெயரே அதிகமா பேசப்பட்டது நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டில்.2009 ஆண்டின் முடிவில் நாம் மிகவும் நெருக்கமா இணைக்கப்பட்டுள்ளோம் .

இதற்கு முக்கிய காரணம் தொழிநுட்பத்தில் ஏற்பட முன்னேற்றமே அன்றி வேறொன்றுமில்லை.புத்தங்களை இனி கையில் கொண்டு செல்லத் தேவை இல்லை.புத்தகங்கள் எல்லாம் மின் புத்தகங்களாக வந்துவிட்டன.

கைத்தொலை பேசி மூலம் பேஸ்புக்கை பார்க்கும் வசதியும் நம்மிடம் கைவசம் உள்ளது.
அப்படி என்ன தொழில் நுட்ப பரிமணம் ஏற்பட்டது 2009 ஆம் ஆண்டில்.

1.
2009 ஆம் ஆண்டின் இறுதியில் சாதாரண தொலைபேசி காலவதியாகிவிட்டது.இதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் தொலைபேசி எனப்படும் சகல வசதிகளையும் கொண்ட தொலைபேசிகளாகும்.

ஸ்மார்ட் தொலைபேசிகள் ஒரு மினி கணனி போல் வேலை செய்கின்றன.இவை ஒரு கணணி கொண்டுள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன .காலநிலை தகவல் தொடக்கம் விமான பயண நேரம் வரையான அனைத்து தகவல்களை பெற முடியும் .

பல்வேறு இணையதள தகவல்கள் மூலம் அறிய கிடைப்பது ,இந்த கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் ஸ்மார்ட் விற்பனை 24 வீதத்தால் அதிகரித்துள்ளது 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது.

2.


2009 ஆம் ஆண்டு பேஸ்புக் ஆண்டேன்றால் அது மிகை இல்லை.
2004 ஆம் சில நண்பர்கள் தமக்கிடையே தகவல்களை பகிர உருவாக்கபட்டது.

ஆனால் இன்று 350 மில்லியன் பாவனையாளர்களை கொண்டு வெற்றி நடை போடுகிறது.இபோது எமது பேஸ்புக் வாழ்கையின் ஒரு பகுதியாகிவிட்டது .

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 150 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்கள் இருந்தனர் இன்றோ 350 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்கள்.ஒரு சராசரி பேஸ்புக் பாவனையாளர் ஒரு நாளில் 60 நிமிடங்களை பேஸ்புகில் செல்வழிகிறார் .


3.

தேடல் இயந்திரங்களுக்கிடையான போட்டியும் 2009 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று.கூகிள் தேடு பொறியே தேடல் இயந்திரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆனால் 2009 இல் சிறிய தேடல் நிறுவனங்கள் புதுமையான தேடல் யோசனைகளுடன் கூக்ளிக்கு போட்டியாக வந்தன..இதில் முக்கியமானது Wolfram-Alpha எனப்பட்டும் தேடு பொறியாகும்.

இத்தேடு பொறியானது தேடல்களுக்கு விடைதருவது மட்டுமல்லாது ,ஏனைய பல விடயங்களை தருகிறது.உதாரணமாக ஒரு நாட்டின் பெயரை தட்டச்சு செய்தால் அந்நாடு தொடர்பான பல விடயங்களை தருகிறது .

இன்னொரு போட்டி கூகிள் எதிர் கொள்வது பிங் எனப்படும் மைக்ரோசொப்டின் தேடு பொறி.பிங் அறிமுகப்படுத்திய போட்டோக்களை தேடும் புதிய முறைகள் மற்றும் அதன் வேகம் என்பன ,தேடல் உலகின் 10
வீதமா தேடலை பிங் வசம் வைத்திருக்க உதவியது .

1 comment:

Anonymous said...

good work

Post a Comment