தினமும் 66 மில்லியன் அங்கத்தவர்கள் பார்வையிடும் இணையத்தளமான த்விட்டேர்ஐ கொள்வனவு செய்யும் நோக்கத்தில் கூகிள் உள்ளது .இதற்கான காரணம்,த்விட்டேர் மிகவும் விரைவாக வளரும்
இணையத்தளங்களில் ஒன்றாக உள்ளதுடன் இதில் மாதம் 60 மில்லியன் புதியவர்கள் அங்கத்தவர்கள் ஆகின்றனர்.
கூகுளின் முன்னைய முயற்சியான ஓர்குட்(Social networking site like, Facebook) ஐ கொள்வனவு செய்யும் திட்டமும் கைகொடாத நிலையிலும் ,அதன் புதிய அறிமுகமான கூகிள் வ்வேவும் (Google Wave)எதிர்பார்த்த பெறுபேற்றைத்தரதா நிலையிலும் கூகிள் தனது த்விட்டேர்ஐ கையகப்படுத்தும் நோக்கத்தில் மும்முரமாக இறங்கும் என எதிர்பர்கப்படுகின்றது .
2.
டிக்க் என்பது ஒரு தேடல் இயந்திரம் ,உதாரணமாக கூகுளில் ஒரு சொல்லை தேடினால் மில்லியன் கணக்கான எமது தேடலுடன் தொடர்புபட்ட சொல்லை தரும் ஆனால் டிக்கில் தேடினால் எமது தேடலுடன் தொடர்பு பட்ட மிகவும் பிரபல்யமான தேடல்களை மட்டும் தரும். இப்பிரபல்யமான தேடல்கள் பாவனையாளர்களின் கருத்தை கொண்டே தீர்மானிக்கப்படும்.
உதாரணமாக உணவு சம்மந்தமான வெப்சைட்ஐ டிக்கில் சமர்பிக்கிறீர்கள்அந்த வெப்சைட் டிக்க் பாவனையாளர்களால் அதிகளவு விரும்பப்பட்டால் டிக்க் தேடலில் முதல் பக்கத்தில் வரும்.
கூகிள் இதில் காதல் கொள்ள காரணம் ,கூகிள் யாஹூ அல்லது ம்ஸ்ன்(MSN) மாதிரி விளம்பரங்களை தனது வெப்சைட்ல் பிரசுரிப்பது இல்லை.கூகிள் தனது வருமானத்தை திரட்டுவது பிறருடையா வெப்சைட்ல் விளம்பரங்களை பிரசுரிப்பது மூலமாகத்தான் .கூகிள் ஆனது டிக்கை வேண்டினால் கூகிள் தனது விளம்பரங்களை பிரசுரிப்பது இலகுவா இருக்கும்.அத்துடன் கூகுளின் வியாபார உத்தியும் டிக்கின் வியாபார உத்தியும் ஒரே மாதிரி உள்ளது.
3.
Jumptap
ஜம்ப்டப் என்பது ஒரு மொபைல் விளம்பர நிறுவனமாகும்.கைத்தொலை பேசிவழி விளம்பரம் செய்வதில் இந்நிறுவனம் புகழ் பெற்றது.
கணணி வழி விளம்பரங்கள் இணைய உலகத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் கைத்தொலை பேசிவழி விளம்பரகள் அடுத்த தலை முறை விளம்பர உத்தியாக இருக்கும் என கூகிள் நம்புகிறது.
4.
Yelp
எல்ப் இணைய தளமானது பாவனையாளர்கள் தமது பிற்குறிப்புகளை பகிர இடமளிகிறது .இப்பிற்குறிப்புக்கள் பெரும்பாலும் பாவனையாளர்களின் தனிபட்ட சுற்றுலா அனுபவம்,ஒரு குறித்த விடுதி பற்றிய அனுபவம் அல்லது குறித்த உணவகம் பற்றிய அனுபவம் அல்லது ஒரு பிரபல்யமான இடம் பற்றிய கருத்துரைகளை பதிய இடமளிகின்றது.
எல்ப் இணையத்தளத்தை வாங்குவதன் மூலம் தனது விளம்பர எல்லையை மேலும் விஸ்தரிக்கலாம் என கூகிள் எண்ணி உள்ளது .
5.
Cellfire
செல்பயர் என்பது இலத்திரனியல் க்குபன்களை வழங்கும் கைத்தொலைபேசி நிறுவனமாகும்.இலத்திரனியல் க்குபன்களும் கூகுளால் இணையத் தளங்களில் பிரசுரிக்கப்படும் விலைகழிவு விளம்பரங்களும் ஒப்பிட்டு அளவில் ஒத்தவை.கைத்தொலை பேசிவழி விளம்பரம் செய்வதற்கு செல்பயர் கொள்வனவு ஒரு மைல் கல்லாக இருக்கும் என கூகிள் நம்புகிறது.
6.
Yandex
யன்டெக்ஸ்சை என்பது ரஷ்யாவின் கூகிள் எனலாம். யன்டெக்ஸ் ரஷ்யாவின் பெரிய நிறுவனமும் தேடல் இயந்திரமும் ஆகும்.ரஷ்யாவிலும் அதனை சூழவுள்ள நாடுகளினாலும் அதிகளவு உபயோகிக்கப்படும் தேடல் பொறி யன்டெக்ஸ்சை ஆகும்.
இதற்கு காரணம் மிக தரமான ரஷ்ய மொழியை யன்டெக்ஸ்சை பாவிப்பதால் பாவனையாளர்களுக்கு மிக திருப்தியான தேடல் பதிவுகளை கொடுக்கின்றது.
யன்டெக்ஸ்சை வாங்குவதன் மூலம் சோவியத் ஒன்றிய நாடுகளில் தனது காலை மேலும் பலமாகயுன்றலாம் என கூகிள் எண்ணுகிறது.